
தூதரக சேவையில் மட்டுப்பாடு
வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவல்கள் பிரிவு மற்றும் கண்டி, திருகோணமலை, யாழ்ப்பாணம், மாத்தறை, குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்களின் ஆவணங்களின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்புப் பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, தூதரகப் பிரிவு மிகவும் அவசரமான ஆவணங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் நிலையில், கணினிக் கட்டமைப்பு சீராக்கப்பட்டவுடன், ஏனைய ஆவணங்களுக்கான பணிகள் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
