
தூங்கவிடாமல் தொந்தரவு செய்த குழந்தைக்கு அத்தை செய்த காரியம்
இந்தியாவில் அழுத குழந்தையின் மூக்கு மற்றும் வாயை தந்தையின் சகோதரி மூடியதால் 2 வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரை சேர்ந்தவர் முகமது ஷகீல் தனது 2 வயதான குழந்தையை காணவில்லை என பொலிஸாரிடம் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் முகமது ஷகீல் தங்கையின் அறையில் உள்ள கட்டிலின் அடியில் குழந்தையின் உடல் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இதனைத்தொடர்ந்து தங்கையிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது குழந்தை தூங்க விடாமல் தொந்தரவு செய்ததால் தான் அடித்ததாகவும், வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதால் மூக்கு மற்றும் வாயை மூடிய போது குழந்தை இறந்துவிட்டதாகவும், அதனை மறைக்க குழந்தையின் உடலை கட்டிலின் அடியில் மறைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
