தூக்கி வீசப்பட்ட குடியிருப்பின் கூரைகள்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் இன்று புதன் கிழமை காலை அசாதாரண காலநிலை நிலவியதால் சில இடங்களில் காற்றும், சில இடங்களில் மழையுடன் கூடிய காற்றும் வீசியது.

இதனால் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த தொடர் மாடி குடியிருப்பின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

இதனால் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்