
தூக்கில் தொங்கிய நிலையில் உடற்பாகங்கள் மீட்பு
-பதுளை நிருபர்-
கந்தகெதர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை கந்தகெதர கிரிகல்பொத்த காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நபரின் உடல் பாகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கந்தகெதர பொலிஸார் தெரிவித்தனர்.
தூக்கில் தொங்கி உயிரிழந்த நபர், கெடிகஹத்தன்ன பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று 28ஆம் திகதி மதியம் குறித்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் காட்டுப்பகுதிக்குள் சென்ற போது மரத்தில் சடலம் ஒன்றின் பாகங்கள் தூக்கில் தொங்குவதை கண்டு கந்தேகெதர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி வேலைக்குச் செல்வதாக , வீட்டை விட்டு சென்ற நபர் அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனவும், உயிரிழந்த நபர் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்க முடியாமல் பல பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த நபரின் கையடக்கத் தொலைபேசி குடை மற்றும் அவர் கொண்டு சென்ற துணிமணிகள் பை ஆகியவை அவ்விடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
உடல் பாகங்கள் காணப்படும் இடத்தில் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கந்தகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
