
தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்பு
வாழைச்சேனை ஓட்டமாவடி நாவலடி பகுதி வீடொன்றில் இருந்து இன்று ஞாயிற்று கிழமை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலடி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த ஐ.எம்.பர்ஷாத் (வயது – 24) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவி வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த இவர் உயிரை மாய்த்துக் கொள்ள போதைவஸ்துப் பாவனையே காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
