
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிப்பு
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக உறுப்பினர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் டேமியன் அமல் கப்ரால், மொஹான் ரே அபேவர்தன, சஞ்சய குலதுங்க மற்றும் கலாநிதி ஹர்ஷ சுபசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்




