துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் ஆயிரம் கொள்கலன்கள்

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால்,
800 -1000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

துறைமுக அதிகாரசபை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நிர்வாகத்தில் நிலவும் குறைபாடுகள் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் கொள்கலன் அனுமதி தாமதம் காரணமாக, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை 20 வீதத்தால் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்