துருக்கியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளபூகம்பங்கள்

துருக்கியை தொடர்ச்சியாக பல பூகம்பங்கள் தாக்கியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு சில நிமிடங்களில் மர்மரா கடலோர பகுதியில் பல பூகம்பங்கள் உணரப்பட்டுள்ளன என துருக்கியின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இஸ்தான்புலை தாக்கியுள்ள பூகம்பமே பெரியது ( 6.2) இதன் தாக்கம் பல பகுதிகளில் உணரப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்தான்புலின் புயுக்செக்மேஸ் மாவட்டத்தை மூன்று பூகம்பங்கள் தாக்கியுள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணையத்தளம் செயல்இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேதமடைந்த கட்டிடங்களிற்குள் செல்லவேண்டாம் என இஸ்தான்புல் அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க