துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு

துருக்கியின், பாலிகேசிரி மாகாணத்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6.1 ரிக்டர் அளவில் சிந்திர்கி நகரத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல்லின் வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்ணொருவர் மீட்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கியின் உள்நாட்டு அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார் .

தொடர்ந்தும் மீட்பூ நடவடிக்கைகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் .