தும்முல்ல சந்தி மற்றும் திம்பிரிகஸ்யாயவிலிருந்து ஹைலெவல் வீதிக்குள் கனரக வாகனங்கள் பிரவேசிக்க தடை
தும்முல்ல சந்தி மற்றும் திம்பிரிகஸ்யாயவிலிருந்து ஹைலெவல் வீதிக்குள் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை கனரக வாகனங்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் துறையின் 159ஆவது ஆண்டு நிறைவையொட்டி , திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொலிஸ் மேலதிக படை தலைமையகத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்காரணமாக குறித்த பகுதியில் ஹைலெவல் வீதியூடாக கனரக வாகனங்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.