தும்பங்கேணி மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு
இளைஞர் விவசாய திட்டம் தும்பங்கேணி மக்களுக்காக குடிநீர் வழங்கல் வேலைத்திட்டம் தவிசாளர் திரு.வி.மதிமேனன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இக் குடிநீரை பெறுதல் என்பது தும்பங்கேணி மக்களுக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்துள்ளது. பல மைல் தூரம் கால்நடையாகச் சென்று குடிநீரை பெற்று அன்றாட வாழ்க்கையை கடந்து வரும் இவர்களின் விடியலுக்கான அஸ்திவாரம் இடப்பட்டது.
PSDG வேலை திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்றிட்டங்களில் ஒன்றாக “இளைஞர் விவசாய திட்டம் ” தும்பங்கேணி மக்களுக்கு குடிநீர் வழங்கல் வேலையானது இன்று ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த பயணத்தின் போது மக்களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை தவிசாளர் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த நீர் வழங்கல் வேலை திட்டமானது எதிர்வரும் காலங்களில் மேலும் விஸ்தரிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் என தவிசாளர் தெரிவித்தார்.