தும்பங்கேணி நெற்சந்தைப் படுத்தும் நிலையம் படையினரால் துப்பரவு

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தும்பங்கேணி நெற்சந்தைப் படுத்தும் நிலையம் படையினரால் துப்பரவு இன்று செவ்வாய்கிழமை செய்யப்பட்டது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் குறித்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதை  அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு கல்லடி 243 ஆவது இலங்கை இராணுவ படைப்பிரிவின் பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பெயரில் குருக்கள்மடம் இராணுவ முகாம் படையினரால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட தும்பங்கேணி நெல் சந்தைப் படுத்தும் நிலையம் இன்று செவ்வாய்கிழமை துப்பரவு செய்யப்பட்டன.

இது வரைகாலமும் துப்பரவுப் பணிகள் செய்யமால் காணப்பட்டிருந்த குறித்த நெற்சந்தைப்படுத்தும் நிலையம் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ்  படையினரால் துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்