தும்பங்கேணியில் வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட தும்பங்கேணி பிரதேசத்தில் திடீரென மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது.

இந்த பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீடொன்று மின் கசிவினால் தீப்பற்றி எரித்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவ இடத்திற்கு போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன், உப தவிசாளர் கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் அனோஜன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப் பிரதேசத்தில் அடிக்கடி மின் கசிவு ஏற்படுகின்றமை தொடர்பில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என தவிசாளர் தெரிவித்திருந்தார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.