துப்பாக்கி பிரயோகம் தோல்வி: தப்பியோடிய சந்தேக நபர்கள்

காலி – கொஸ்கொட, மஹைந்துருவ பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு முயற்சி தோல்வியடைந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

மஹைந்துருவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் அத்து மீறி வீடு ஒன்றினுள் நுழைந்து நபர் ஒருவரை குறி வைத்து சுட முயற்சித்துள்ளனர்.

இதன் போது துப்பாக்கி இயங்காததால் சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதுடன் அவர்களுடைய முயற்சி தோல்வி அடைந்ததால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பிஸ்டல்  துப்பாக்கி வீட்டின் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்