துப்பாக்கி சூட்டில் 31 வயது இளைஞன் படுகாயம்
காலி, கல்பிட்டியில் உள்ள ஒரு சட்டவிரோத மதுபான விற்பனை பகுதியில் பொலிசார் நடத்திய சோதனையின் போது, 31 வயதுடைய ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
தெலிகட, தொடங்கொட பகுதியில் உள்ள ஜின் கங்கை அருகே சட்டவிரோத மதுபான உற்பத்தி குறித்து 119 அவசர தொலைபேசி எண் மூலம் கிடைத்த தகவலின் பேரில், தெலிகட காவல் நிலைய அதிகாரிகள் செயல்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்த போது அவர்களில் ஒருவர், மது போதையில் வாள் ஏந்திய நிலையில், அதிகாரிகளை அச்சுறுத்தவும் தாக்கவும் முயன்றுள்ளார் இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், சந்தேக நபருக்கு முழங்காலுக்குக் கீழே காயம் ஏற்பட்டதாகவும், பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பத்தேகம, கனேகம தெற்கு பகுதியைச் சேர்ந்த காயமடைந்த சந்தேக நபர், கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தின் போது பல காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெலிகட பொலிசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.