துப்பாக்கி சூட்டில் திருமணமான 8 மாத இளம் தம்பதிகள் பலி
நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் இலக்கம் 5 டொப்பாஸ் எனும் முகவரியில் அமைந்துள்ள தனி வீட்டில் நேற்று இரவு 10.30 மணியலவில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட “கல்கட்டஸ்” துப்பாக்கி வெடித்து இளம் சோடிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது திருமணமாகி எட்டே மாதங்களான இளம் கணவன்,மனைவியான எண்டன் தாஸ் (வயது – 32) மற்றும் நாதன் ரீட்டா (வயது – 32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்ததை அடுத்து, கணவரினால் மனைவி சூட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட நீதவான் வருகை தந்து மரண விசாரணைகள் இடம்பெற்ற பின் சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்