துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பலி

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பகல்நேர பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நாட்டின் வடகிழக்கில் உள்ள நோங் புவா லாம்புவில் இடம்பெற்ற இந்த தாக்குதலுக்குப் பின்னர் துப்பாக்கிதாரி இன்னும் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் சிறார்களும், பெரியவர்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியவர் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்தியுள்ளார்.

சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன், தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக இல்லை என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதன் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

குறித்த அதிகாரி அண்மையில் பொலிஸ் பணியில் இருந்த நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல்தாரி இறுதியாக தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட இலக்கத்தகடுகளை உடைய டொயோட்டா ரக பிக்கப் வாகனத்தைச் செலுத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தின் போது 23 மாணவர்கள் வரை உயிரிழந்ததாகவும் பொலிஸ் உயர் அதிகாரியொருவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.