துப்பாக்கி சூடு : 3 பேர் காயம்

ராகம – வல்பொல பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 அளவில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.