துப்பாக்கி சூடு : பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

பேலியகொடை அதிவேக நெடுஞ்சாலை வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி தன்னுடைய துப்பாக்கியாலே தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ருவன் குமார (54 வயது) என்ற உப பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.