துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தோட்டாக்களை எடுத்து சென்ற நபர்கள்!

தெவிநுவர-தல்பாவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கருவாடு வியாபாரி ஒருவரை குறிவைத்து துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஒரு வீட்டின் முன்னால் வீதியோரம் நிற்கிறார்கள், அவ்வேளை வீட்டின் கேட்டை ஒருவர் திறக்கிறார், உடனே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த நபர், கேட்டை திறந்தவரை நோக்கி துப்பாக்கியால் சுடுகின்றார்

அதன்பின்னர், அவரை துரத்தி சென்று துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு, தோட்டாக்களை சேகரித்து எடுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதை சிசிரிவி காணொளி காட்டுகின்றது.

இச்சம்பவ்தில் யாருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்