
துப்பாக்கி சூடு: ஒருவர் மரணம்
அம்பாறை அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொஸ்கொடை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவரே இதன் போது உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்களே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
