துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

பசறை தன்னுகை பகுதியில் சட்ட விரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 46 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படையினருக்கு சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்து சந்தேகத்துக்கு இடமான பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்து நிரப்பிய நிலையில் துப்பாக்கி ஒன்றை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரையும் துப்பாக்கியும் விசேட அதிரடிப் படையினரால் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணையின் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.