
துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
வவுனியா ஓமந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலர்சின்னக்குளம் பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தனது தென்னந்தோப்பில் இருந்த போதுஇ சந்தேகநபர் ஒழிந்திருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் இடையில் மிக நீண்ட காலமாக நிலவிய தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி என்பன பொலிஸாரினால் இன்று செவ்வாய்கிழமை வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓமந்தை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்