துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை காயம்

பொலன்னறுவை – சிறிகுருஸ்யாய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை ஒன்று காயமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

35 வயது யானை ஒன்றே இவ்வாறு காயமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த யானைக்கு கிரித்தலை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தலைமையில் கால்நடை வைத்தியர்களால் நேற்று திங்கட்கிழமை சிகிச்சை அளிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டின் போது யானையின் வலது பாதத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க