துப்பாக்கிச் சூட்டில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு
கம்பஹா கெஹல்பத்தர பிரதேசத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சிகை திருத்தும் நிலையம் ஒன்றிற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் சுடப்பட்ட அவர், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரிவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
