துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கம்பஹா கவுடன்கஹ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

சம்பவத்தில் கம்பஹா – மாகோவிட்ட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே உயிர் இழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்