துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
கொலன்னாவ – கொத்தடுவ வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 41வயதான ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத நபர்கள் இருவர் நேற்று இரவு 8.40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்