
துப்பாக்கிச் சூடு : மூவர் காயம்
காலி அஹுங்கல்ல, உரகஹா வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டு காயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
