துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
எம்பிலிப்பிட்டிய – மித்தெனிய வீதியின் தோரகொலயாயபகுதியில் உள்ள மலர்சாலை உரிமையாளர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் மலர்சாலையை திறப்பதற்காகச் சென்ற வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
