
துப்பாக்கி சூட்டில் கணவன் பலி : மனைவி படுகாயம்
ஹபராதுவ, பொல்துவ பன்சாலைக்கு அருகில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிள்ளையை பாடசாலைக்கு விட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த தம்பதிகள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்