துப்பாக்கிச்சூடு : இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

 

அநுராதபுரம் பதவிய மஹசென்புர பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மஹசென்புர பகுதியைச் சேர்ந்த தேங்காய் எண்ணெய் வர்த்தகம் செய்து வந்த சம்பத் (வயது – 38) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டில் இருந்தபோது இரண்டு மோட்டார்சைக்கிளில் வந்த மூவர், ரீ56 ரக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் 119 க்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றதுடன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரை பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

எனினும், அதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்