துப்பாக்கிசூட்டில் இருவர் பலி

மொரட்டுவை கட்டுபெத்தை சந்திக்கு அருகில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

பிங்வத்தகே உக்குவா என அழைக்கப்படும் நிலந்த குமார சில்வா மற்றும் மொஹமட் அர்பத் சம்சான் ஆகியோரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

அவர்களது வாகனத்திற்கு எரிபொருள் தருவதாக ஒருவர் தெரிவித்ததையடுத்து குறித்த பிரதேசத்திற்கு குறித்த இருவரும் வருகை தந்துள்ளதாகவும், இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்

பலியான பிங்வத்தே உக்குவா என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளது.