துப்பாக்கிகள் வெடிமருந்துகளுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் ஒருவரை தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமகுலிய குளத்திற்கு அருகிலுள்ள நிலத்தில் நேற்று சனிக்கிழமை காலை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து, 02 உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், 11 ரி 56 தோட்டாக்கள், 03 M.16 தோட்டாக்கள் மற்றும் 03 MPMG தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் காவந்திஸ்ஸபுர – திஸ்ஸமஹாராம பகுதியை சேர்ந்த 37 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.