
துப்பாக்கிகளை மீண்டும் கையளிப்பதற்கு கால அவகாசம் நீடிப்பு
பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட உரிமம் கொண்ட துப்பாக்கிகளை மீண்டும் கையளிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நவம்பர் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிகளை மீண்டும் கையளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு ஒரு மாத கால அவகாசம் வழங்கியதுடன் அந்த காலம் இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடையவிருந்தது.
எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்டு, காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
