துப்பாக்கிகளுடன் எழுவர் அதிரடியாக கைது

ராஜகிரிய பிரதேசத்தில் துப்பாக்கிகளுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் இருந்து ​​ரி56 ரக துப்பாக்கி ஒன்றும், மைக்ரோ ரக துப்பாக்கி ஒன்றும், ரி56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 300 மற்றும், 9எம்எம், 50 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்