
துனித் வெல்லாலகேவுக்கு ஆறுதல் கூறிய சூர்யகுமார் யாதவ்
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியின் போது இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவை சந்தித்தார்.
துனித் வெல்லாலேகவின் தந்தை அண்மையில் காலமானார்.
துனித்துக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் சூர்யகுமார் யாதவ் நேரில் சந்தித்து சிநேகபூர்வமாக உரையாடினார்.
