
தீ பற்றி எரிந்த வீடு: தங்கியிருந்த முதியவரின் நிலை
இரத்தினபுரி – மல்வல வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
54 வயதுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வீடு தீப்பற்றி எரிவதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக செயற்பட்ட இரத்தினபுரி தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர். இதன் போது வீட்டின் இரண்டு அறைகள் முற்றாக எரிந்ததுடன், அங்கு தங்கியிருந்த நபரே தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
