பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள Pakistan Institute of Medical Sciences (PIMS) மருத்துவமனையின் தாய்–சேய் சுகாதாரப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அந்த வார்டில் முறையான தீ எச்சரிக்கை அமைப்போ (fire alarm), தானியங்கி தீயணைப்பு ஸ்பிரிங்களர் அமைப்போ இல்லை என விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த தீ விபத்தில், அங்கு சிகிச்சை பெற்று வந்த 15 பச்சிளம் குழந்தைகளில் 14 பேர் உயிரிழந்தனர். விசாரணையில், தீ விபத்துக்கு மின்சாரக் கோளாறு முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டதுடன், மருத்துவமனையின் தீ பாதுகாப்பு, அவசரகாலத் தயார்நிலை மற்றும் நிர்வாக நடைமுறைகளிலும் கடுமையான குறைபாடுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பொறுப்புக்கூற வேண்டியதாகக் கருதப்பட்ட எட்டு அதிகாரிகளை இடைநீக்கம் செய்து, பொறுப்பு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.










