தீவிரமாக பரவும் வைரஸ்: 11,700 கோழிகள் அழிப்பு

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் அரசாங்கம் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய ஒடிசாவின் பிபிலி பகுதியில் பறவைக் காய்ச்சலைத் தடுக்கும் விதமாகக் கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளை அழிக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிகள் நேற்று மாலை நிறைவடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது சுமார் 11,700 கோழிகள் கொல்லப்பட்டதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்