
தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட விசேட தேவையுடைய நபர்
-பதுளை நிருபர்-
பதுளை – கொஸ்லாந்தை பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தீயில் கருகிய நிலையில் விசேட தேவையுடைய ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
கொஸ்லாந்தை வீதி பூனாகலை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூனாகலை ஆலயத்திற்கு அருகாமையில் தனிமையில் வாழ்ந்து வந்த ஊனமுற்ற குறித்த நபர் இன்று அதிகாலை 01.30 மணியளவில் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றும் போது குறித்த நபர் மீது தீப்பற்றி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
மேலதிக விசாரணைகளை கொஸ்லாந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
