
தீப்பிடித்து எரிந்த கார்
-பதுளை நிருபர்-
மைக்ரோ வகை கார் இன்று சனிக்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்து உள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு கதிர்காமத்தில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த மைக்ரோ வகை கார் பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொளும்புவத்தை 2 ஆம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்து வாகனம் முற்றாக சேதமடைந்து உள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாகனத்தில் இருவர் பயணித்ததாகவும் வாகனப் தீப்பிடித்து எரிந்த வேளையில் இருவரும் பாதுகாப்பாக கீழே இறங்கியுள்ள தாகவும் வாகனத்தில் இருந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் அவர்களின் உடமைகள் அனைத்தும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
