தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்
தீபாவளியை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை முதல் விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க தேசிய போக்குவரத்து ஆணைகுழு தீர்மானித்துள்ளது.
இதன்படி அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் கொழும்பில் உள்ள பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
குறிப்பாக ஹட்டன், வெலிமடை, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் செல்லும் பாதைகளில் பயணிகள் போக்குவரத்தில் அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.