தீபாவளி

இந்துக்களின் நாளேட்டில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும்.

தீபம் என்பது விளக்கையும் ஆவளி என்பது வரிசையையும் குறிப்பதால் தீபாவளி என்பது தீபங்களை வரிசையாக வைத்து இறைவனை வழிபடுதல் என்று பொருளாகும். அதாவது அறிவொளியின் மூலம் அஞ்ஞான இருள் நீக்கி இறைவனை அடைதல் என்பது தீபாவளிப் பண்டிகையின் தத்துவார்த்த ரீதியிலான தாத்பர்யமாகும்.

தீபாவளி தினத்தன்று இந்துக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து கோயில் சென்று இறைவனை வழிபடுவார்கள். உற்றார் உறவினருக்கு விருந்து படைத்து மகிழ்வதும் தீபாவளிப் பண்டிகையின் சிறப்பம்சமாகும்.

தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள். தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள்.

இந்து சமயத்தில் தீபாவளி

தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களைஇ புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.

புராணக் கதைகளின் படி, திருமால் வராக அவதாரம் (காட்டு பன்றி) எடுத்திருந்தபோது அவரது இரு மனைவியருள் ஒருவரான, நிலமகளான (பூமாதேவிக்கு) பிறந்த மகன் பவுமன் என்ற பெயரில் பிறந்தான். (பவுமன் என்றால் அதிக பலம் பொருந்தியவன் அல்லது பலமானவன் என்று அர்த்தம்). பின்பு அவன் இன்றைய இந்தியாவின் அசாம் மாகாணத்தில் உள்ள பிராக்சோதிசா என்னும் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தான். பின்பு தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாதென்று பிரம்மனை நோக்கிக் கடும் தவம் புரிந்தான்.

அப்போது அவன் முன் காட்சியளித்த பிரம்மன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது எனக்கு எந்த நிலையிலும் மரணம் ஏற்படக்கூடாதென்று வரம் கேட்டான், அப்போது பிரம்மன் இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள் யாவும் ஒரு நாள் இறந்தே தீரும் என்றார் பிரம்மன். பின்பு நரகாசுரன் என் தாயால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் வாங்கினான்.

பின்பு மனிதன் ஆக இருந்து ஓர் அசுரன் ஆக மாறியதால், அவனுக்கு நரகாசுரன் என்ற பெயர் ஏற்பட்டது. (நர+மனிதன் சூரன்+அசுரன்) என்பதன் சுருக்கமே நரகாசுரன் ஆகும்.

இவன் கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான். அப்போது கிருட்டிணர் அவதாரத்திற்கு முன்பே திருமால் வராக அவதாரம் எடுத்திருந்தார்.

அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருட்டிணர் தனது மனைவியரில் ஒருவரான ச‌‌த்யபாமா‌ (பூமாதேவியின்) அவதாரமாவார். அவருடன் சென்று நரகாசுரனை அழிக்க பல வகையில் முயற்சித்த கிருட்டிணர் தனது மனைவி சத்யபாமாவை நரகாசுரன் முன்பு ஒரு பேரழகியாக அலங்கரித்து ஒரு நாட்டிய நடனம் நடத்தினார்.

அதில் அழகிய மாறுவேடத்தில் பாரதகிருட்டிணர்–சத்யபாமாவை சாட்டையால் அடித்து ஓர் அடிமை நாட்டியம் ஆட வைக்கின்றார். இந்த நடனத்தின் முடிவில், நரகாசுரன் தனது இறப்பு நெருங்கியது கண்டு அச்சமுற்றாலும், நரகாசுரன் ஓர் அம்பை, கிருட்டிணரை பார்த்து விட்ட போதிலும் அந்த அம்பை தனது கணவன் மீது படாமல் நாட்டியம் ஆடும் அழகியான சத்யபாமா தன் நெஞ்சில் வாங்கிக் கொள்கிறாள்.

அந்த அம்பு நெஞ்சில் விழுந்த வலியைக் கூட பொருட்படுத்தாமல் தன் நெஞ்சில் இருந்து எடுத்து நரகாசுரனை சத்யபாமா கையால் அழிக்க வைத்தார் கிருட்டிணர் என்றும் கிருட்டிணர் தனது திறமையால் அந்த நரகாசுரனை இறக்க வைக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.

இந்த நரகாசுரனின் வதத்தை மகாபாரத்தில் சிவந்தமண்களம். அதாவது {சிவந்த+(இரத்தம்)+மண்(பூமி)+களம்(போர்புரியும்இடம்)} என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் கிருட்டிணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருட்டிண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார்.

அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

இராமாயண இதிகாசத்தில் இராமர்- இராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தையும் முடித்து விட்டு மனைவி சீதையுடனும் தம்பி இலட்சுமணனுடனும், அயோத்திக்கு திரும்பிய நாளை அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.

கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீசுவரர்’ உருவமெடுத்தார்.

தமிழகத்தில் முதன்முதலாக கி.பி.15ஆம் நூற்றாண்டு விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் கோயில்களில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேட்டிலும் காணப்படுகின்றன திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தஞ்சை மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் தேர்திருவிழாவின் போது வான வேடிக்கையுடன் தீபாவளி கொண்டாடியதாக அங்குள்ள சுவரோவியங்கள் மூலம் அறியலாம்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்