தீபகற்பத்தில் எரிமலை வெடிப்பு

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து நான்காவது முறையாகவும் எரிமலை வெடித்துள்ளது.

ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள ஸ்டோரா ஸ்கோக்ஃபெல் மற்றும் ஹகாஃபெல் இடையே எரிமலை வெடிப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஐஸ்லாந்தின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.