தீடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி
நாவலப்பிட்டி, தெகித பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து நேற்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
எரிபொருள் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின் சாரதி தானம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு மீண்டும் வீடு நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் போதே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
