“தி ஹென்லி” கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் இலங்கை

“தி ஹென்லி” கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் 42 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி பெற்ற இலங்கை கடவுச்சீட்டு 91ஆவது இடத்தை பெற்றுள்ளது.

193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதி பெற்ற உலகின் மிகவும் சக்திவாய்ந்த விமானப் பயண கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக தெரிவுசெய்யப்பட்ட சீனா “தி ஹென்லி” தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

99 இடங்களைக் கொண்ட இந்தப் பட்டியலில், ஈரானும் சூடானும் இலங்கையுடன் சமமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 42 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

இந்தப் பட்டியலில் ஜப்பான் மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்திலும், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், பயண விசா தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

2024 இல் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 96ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வருடம் இலங்கை 5 இடங்கள் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24