திறன் வகுப்பறை அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

வன்னி ஹோப் நிறுவனத்தின் அணுசரனையில் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு திறன் வகுப்பறை அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை நடைபெற்றது

வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் நாடாளவிய ரீதியில் முன்னெடுத்துவரும் கிராமப்புற பாடசாலைகள் மற்றும் பயிற்சி நிலையங்களுக்கு திறன் வகுப்பறைகள் வழங்கும் விசேட செயற்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு அவுஸ்திரேலியா நாட்டில் வசிக்கின்ற தாமோ புஷ்பம் கங்காதரனின் நிதி அணுசரனையில் வன்னிஹோப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ் திறன் வகுப்பறை அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரீ.எம் பாரிஸ், வன்னி ஹோப் நிறுவன உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திறன் வகுப்பறை அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வு

திறன் வகுப்பறை அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்