
திருவிழாவின் போது பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் படுகாயம்
நுவரெலியா – பொகவந்தலாவை செப்பல்டன் தோட்ட கோவிலில் வருடாந்த தேர்த் திருவிழாவின் பறவைக்காவடி ஏற்றிய டிராக்டர் நேற்று சனிக்கிழமை பகல் கவிழ்ந்ததில் ஒருவர் காயமடைந்ததாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
டிராக்டர் டிரெய்லர் சமநிலையை இழந்து வீதியை விட்டு விலகிய நிலையில் பறவைக்காவடி எடுத்து வந்த நபருடன் சேர்ந்து, தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தின் பின்னர் தாங்கியில் தொங்கிக் கொண்டிருந்த நபரை மீட்டு கோவிலுக்கு ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது பறவைக்காவடி எடுத்து வந்த நபர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
