திருவருள்மிகு பூர்ணா புஷ்பகலா சமேத ஐயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காடு பகுதியில் பகுதியில் அமைந்துள்ள திருவருள்மிகு பூர்ணா புஷ்பகலா சமேத ஐயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 27 ஆரம்பமாகிய திருவிழா இன்றைய தினம் தேர் திருவிழா சிறப்புற நடைபெற்றது .
இத்தேர் திருவிழா நிகழ்வில் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் பிரபல்யமான கலைகளில் ஒன்றான சண்டி மேள வாத்தியம் மற்றும் கதகளி ஆட்டம், பரதநாட்டியம், யானை ஊர்வலம் என பல்வேறு வகையான நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.