
திருமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஸ்ரீபதி பதவியேற்பு!
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஜெ.ஸ்ரீபதி இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அவரது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
